பிரபுதேவா இயக்கத்தில் இந்தி நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி நடிக்கவுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி.

சூரஜ் பஞ்சோலி 2015-ஆம் ஆண்டு வெளியான ‘ஹீரோ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அவர் நடித்த முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இந்த நிலையில் அடுத்தப்படியாக இவர் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாக உள்ள இப்படம் தென்னிந்தியாவில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரீ-மேக். ஆனால் அதுப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

இதுகுறித்து சூரஜ் பஞ்சோலி தன் டிவிட்டர் பக்கத்தில், “இதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாது பிரபுதேவா. உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். உங்களுடைய உத்வேகத்துக்கு நன்றி! என்றுத் தெரிவித்துள்ளார்.