இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள 'பஹிரா' படத்தின் மிரட்டல் டீசர் வெளியாகியுள்ளது. 

இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள 'பஹிரா' படத்தின் மிரட்டல் டீசர் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் முதல் முறையாக, பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'பஹிரா'. படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து, விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி மிரட்டியுள்ளது.

ஒவ்வொரு காட்சிகளும் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தில் கூடுதல் இளமையோடு 10 க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றி, பெண்களை காதலித்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவாக நடித்துள்ளார் பிரபுதேவா.

மேலும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், உள்ளிட்ட பல நடிகைகள் நடித்துள்ளனர். பெண்களை காதலில் விழ வைத்து... கொலை செய்யும் சைக்கோ ராஜாவாக நடித்துள்ள பிரபு தேவாவின் உழைப்பு, இந்த படத்தின் டீசரில் உள்ள காட்சிகளே, பார்த்தாலே தெரிகிறது.

'மன்மதன்' படத்தில் சிம்புவுக்கு நடித்ததைப் போல் இந்த படத்தை பிரபுதேவா நடித்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் மன்மதனையே மிஞ்சும் விதத்தில் பிரபு தேவா நடித்துள்ளதாகவும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் இந்த டீசருக்கு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. கணேசன் சேகர் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

பஹிரா பட டீசர் இதோ...