பிரபு தேவாவின் 'பொன் மாணிக்கவேல்' திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த 'தர்பார்' படத்துக்கு டஃப் கொடுக்கும் விதமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பிரபு தேவாவின் 'பொன் மாணிக்கவேல்' திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியுள்ள இந்த திரைப்படம், முழுக்க முழுக்க, ஆக்ஷன் - திரில்லர் கலந்த படமாக உருவாகியுள்ளது. 'பொன் மாணிக்கவேல்' என்கிற பெயருக்கு ஏற்றது போல், இந்த படத்தின் டீசரிலும் கம்பீரமாக தோன்றி அதிரடி காட்டி அசத்தியிருந்தார் பிரபு தேவா. போலீஸ் கெட்அப்பில் கெத்து காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை ரிலீஸ் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை, 'கண்டேன்' படத்தை இயக்கிய இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். நடிகை நிவேதா பெத்துராஜ், கதாநாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிபிச்சன்ட் சபாக், என்பவர் சபாக் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார். இதுவரை ரிலீஸ் தேதி வெளியிடப்படாத நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.