பிரபாஸ் மட்டும் ஒத்துழைக்கவில்லை என்றால் பாகுபலி படம் சாத்தியமில்லை என ராஜமௌலி பலமுறை, பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அவரேதான், ஐந்தாண்டுகள் இந்த படத்திற்காக உழைத்த பிரபாஸ் ஒரு சோம்பேறி என தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ராஜமொலி சொன்னது:

“படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார், ஷூட்டிங்கில் ஆக்டிவாக இருப்பார் ஆனால், மற்ற நேரங்களில் சோம்பேறித்தனமாகவே இருப்பார்.

"எடுத்துக்காட்டாக பிரஸ் மீட் முடிந்து ஃப்லைட் பிடிக்க இன்னும் அரை மணி நேரம் தான் உள்ளது, ஆனால், பிரபாஸ் அனைவரையும் பொறுமையாக உட்காருங்கள், நான் சொல்லும்போது போகலாம் என கூலாக உட்கார்ந்துவிட்டார். அவ்வளவு பெரிய சோம்பேறி” என்று கூலாக பிரபாஸைப் பற்றிச் சொன்னார்.