பிரமாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள படத்தில், பாகுபலி நாயகன், நடிகர் பிரபாஸ் (Prabhas) கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது அவரது 25-வது (25th movie) படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை, சந்தீப் ரெட்டி வங்கா (Sandeep reddy vanga) இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிரமாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள படத்தில், பாகுபலி நாயகன், நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது அவரது 25-வது படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: அப்பாவுக்கும் - தாத்தாவுக்கும் ஒரே வயசு! தாங்க முடியாத துயரம்... வறுமையை கடந்து சாதித்த பிக்பாஸ் சுருதி!

‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட் கே’ எனும் திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது.
மேலும் செய்திகள்: 4 வருடத்தில் விவாகரத்து..!! திருமண நாளில் வெள்ளை நிற உடையில் சமந்தா போட்ட பதிவு..!!
‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுக்காக பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் சுமார் 8 மொழிகளில் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
