Project K : சூட்டிங் ஸ்பாட்டில் தீபிகா படுகோனை உபசரித்த பிரபாஸ் அவருக்கு ஆடம்பர தெலுங்கு  உணவு வகைகளை பரிமாறி உள்ளார்.

தெலுங்கு ஸ்டார் பிரபாஸ், 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வினுடன் இணைந்து, 'புராஜெக்ட்-கே' படத்தில் நடித்து வருகிறார். , பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்து வரும் இந்த படத்தில் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

படத்திற்கு தற்காலிகமாக 'புராஜெக்ட்-கே' என்று பெயரிடப்பட்டுள்ளது, தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் முதல் ஷெட்யூலைத் தொடங்கியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. பிரபாஸ் மற்றும் தீபிகா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படக்குழுவினர் எடுக்க உள்ளனர்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள தீபிகா படுகோன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்தார், அதே நேரத்தில் பிரபாஸும் செட்டில் இருந்தார். இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் பிரபாஸ் மற்றும் தீபிகா இடம் பெற்ற முதல் ஷாட்டின் வீடியோ பைட்டை வெளியிட்டனர்.

சூட்டிங் ஸ்பாட்டில் தீபிகா படுகோனை உபசரித்த பிரபாஸ் அவருக்கு ஆடம்பர தெலுங்கு உணவு வகைகளை பரிமாறி உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தீபிகா படுகோன் பகிர்ந்துள்ளார்.