அதுமட்டுமின்றி ராதே ஷியாம் வெளியிட்டு தேதியை அறிவிக்காமல் இருந்த படக்குழு அந்த வீடியோவுடன் அதையும் வெளியிட்டுள்ளது. 

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷியாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தின் முக்கியக் காட்சிகளை படக்குழு இத்தாலியில் படமாக்கியுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘ராதே ஷியாம்’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரயில் ஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில் ‘செய் உன் அங்கெலோ? தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி?’என்று காதல் பொங்க பூஜாவிடம் பிரபாஸ் பேசும் காட்சிகள் காதலர்களை மெய் மறக்கச் செய்கிறது. இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.

காதலர் தினத்திற்கு சரியான பரிசாக வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி ராதே ஷியாம் வெளியிட்டு தேதியை அறிவிக்காமல் இருந்த படக்குழு அந்த வீடியோவுடன் அதையும் வெளியிட்டுள்ளது. ஜூலை 30ம் தேதி படம் வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளிய டீசர் இதோ... 

Scroll to load tweet…