PRABHAS is the Most SEXIEST and Rana is my BROTHER Anushka Shocking Comments
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ளனர்மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
பாகுபலியில் நாயகன் நாயகி அனுஷ்கா, பிரபாஸ் இருவருக்கும் 30 வயதை கடந்தாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திரையில் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட ஜோடி நிஜ வாழ்வில் இணைந்தால் அருமையாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இருவரும் காதல் செய்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவருமே கண்டுகொள்ளவில்லை, மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம் பிரபாஸ், ராணா இருவரில் யார் ஆணழகன் என கேட்கப்பட்டது. யாரை அனுஷ்கா தேர்ந்தெடுப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, பிரபாஸ் தான் ஆணழகன் என அசால்ட்டாக சொல்லிவிட்டார் அனுஷ்கா.
ராணா என்னை எப்பொழுதுமே சிஸ்டர் என்று தான் அழைப்பார். பதிலுக்கு நானும் அவரை பிரதர் என்றே அழைப்பேன் என்று அனுஷ்கா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அனுஷ்கா பாகுபலி படங்களுக்கு முன்பாக பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவருடன் நடிக்க தயார் என்று அனுஷ்கா கூறியுள்ளார்.
