'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடிப்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'ராதே ஷியாம்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடிப்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'ராதே ஷியாம்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும், 'ராதே ஷியாம்' படத்தின் முதல் பார்வை முதல், போஸ்டர் வரை அனைத்துமே இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து. இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக 'பல பண்டிகைகள், ஒரே காதல்' என்று தலைப்பிட்ட புதிய போஸ்டரை 'ராதே ஷியாம்' படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்த போஸ்டர் படம் குறித்த எதிர்பார்ப்புகளை இன்னும் வலுக்க செய்தது என்றே கூறலாம். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ளது படக்குழு. பரபரப்பான காதல் கதையான ராதே ஷியாமில், பிரபாஸின் ஜோடியாக தற்போது தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகி பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ரோம் பின்னணியில் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளை கொண்டாடும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தை, ஜூலை 30 அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இப்படத்தைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். அகில இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பிரபாசையும், அழகு மிளிரும் பூஜாவையும், அவர்களுக்கு இடையேயான காதலையும் திரையில் காண மிகப்பெரிய ஆவல் நிலவிய நிலையில், திடீர் என படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. 

கொரோனா காலம் என்பதால்... எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில்... பட தேதியை மாற்றியது படக்குழு. இந்நிலையில் இந்த திரைப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பன்மொழிப் படமான ராதே ஷியாமை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். யூவி கிரியேஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. வம்சி மற்றும் பிரமோத் இப்படத்தை பிரமாண்ட செலவில் தயாரித்துள்ளனர்.


Scroll to load tweet…