Prabhas and Anushka get married - Fans prefer

பாகுபலி 2 படத்தைப் போன்று ரியல் வாழ்க்கையிலும் பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி தற்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் பாகுபலி 2.

முதல் பாகத்தில் தமன்னாவை காதலிப்பதும், இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் பிரபாஸ்க்கு கச்சிதம்.

இப்படம் உருவாக கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில், இருவரும் சில சமயங்களில் நெருக்கமாகவும் பழகியுள்ளனர். ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்தாலே தெரியும். அதில், இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு பேசி சிரித்து கொண்டிருந்தனர்.

பாகுபலி-2 வெளியான பிறகு திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறியிருந்தார். இப்படம் உருவாகும்போது அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஆகியோர் பற்றி வதந்திகள் பரவி வந்தது.

இதனைத் தொடர்ந்து பிரபாஸ், அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதுசரி, யார் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு ரசிகர்கள் யார்? இவர்கள் பேச்சை கேட்டு திருமணம் செய்து கொண்டு எதிர்காலத்தில் பிரச்சனை வந்தால் இவர்களா தீர்த்து வைப்பார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது ரசிகர்கள் தங்களது எல்லையை தாண்டுகிறார்களா? என்று தோன்றுகிறது. இதுவும் ஒரு ரசிகனின் கருத்தே.