prabas talk about her wife
முழுநேர தெலுங்கு நடிகராக இருந்த பிரபாஸ், பாகுபலி படத்திற்குப் பின் தமிழ் ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகராக மாறிவிட்டார். இவருக்கு எப்படி தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய ரசிகைகள் கூட்டம் உள்ளதோ அதே போல இவருக்கு கோலிவுட் திரையுலகிலும் பல ரசிகைகள் உள்ளனர்.
இவர் பாகுபலி 2 படபிடிப்பில் இருந்த போது... ஆயிரக் கணக்கில் திருமணத்துக்காக ஜாதகம் வந்ததாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது 38 வயதாகும் பிரபாசுக்கு சீக்கிரம் திருமணம் நடத்திவிட வேண்டும் என இவருடைய குடும்பத்தினர் நினைத்தாலும் இவருக்கு ஏனோ திருமணம் மட்டும் சீக்கிரம் கைகூடவில்லை.

இந்நிலையில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவரிடம் திருமணம் பற்றி நடிகை மஞ்சு லட்சுமி நேர்காணலில் கேள்வி கேட்டுள்ளார். அப்போது இந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரபாஸ் என் மனைவி செயற்கைத் தனம் இல்லாத ஆத்மாவாக இருக்க வேண்டும் என்றும், என்னை எப்போதும் அன்பாக கவனித்துக்கொள்ளும் மனைவியாக இருந்தால் போதும் என்றும் கூறியுள்ளார். அதில் முக்கியமாக, புற அழகைப் பற்றி பெரிதாக எனக்குக் கவலை இல்லை என கூறியுள்ளார்.

கண்டிப்பாக அப்படி ஒரு பெண் கிடைத்து விட்டால் அவர் தான் மிஸ்ஸஸ் பாகுபலி என அனைத்து தொலைகாட்சியிலும் செய்திகள் வெளியாகும் என்று பிரபாஸ் கூறியுள்ளார். இவரிடம் இருந்து வந்த இந்த பதில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது
