prabas future wife should sword fight rana published poster
பாகுபலி புகழ் நடிகர் ராணா, நடிகர் பிரபாஸூக்கு பெண் தேடி டுவிட்டரில் வெளியிட்ட போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
பாகுபலி திரைப்படத்தில் நடித்த பிரபாஸூம், ராணாவும் படத்தில் இருவரும் பரம எதிரி என்றாலும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்கள்.
தற்போது பெரும்பாலான ரசிகர்களின் கேள்வி பிரபாஸூக்கு எப்போது கல்யாணம்? என்பது தான்.
பிரபாஸின் அம்மா, அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வருகிறாராம். இந்நிலையில் பிரபாஸ் உடன் நடித்த அவரது நண்பர் ராணாவும் அவருக்கு பெண் பார்த்து வருகிறார்.
2016-ஆம் ஆண்டு பிரபாஸுக்கு பெண் தேடி டுவிட்டரில் திருமண விளம்பர போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். விளையாட்டிற்காக வெளியிட்டார். அதில் 36 வயதாகும் போர் வீரனுக்கு பெண் தேவை. 6.2 அடி உயரம் கொண்டவர். பெண் காடுகளில் தங்கும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும். வாள் சண்டை தெரிந்திருக்க வேண்டும் என்று பிரபாஸை கலாய்க்கும் வகையில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டிருந்தார் ராணா.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
