'பாகுபலி' படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். அதிலும் இந்த படத்திற்கு பிறகு திருமண ப்ரபோசல் அதிகமாகவே வருகிறது என சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிவரும் 'சாஹே' படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான். விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபாஸ் Los Angeles  ஏர்போர்ட்டில் சென்று கொண்டிருந்த போது, ரசிகை ஒருவர் ஆசையாசையாக வந்து, அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். பின் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செல்லமாக அவருடைய கன்னத்தை தட்டி விட்டு சென்றார்.

பிரபாஸும் சிரித்தவாறு ரசிகையின் அந்த குறும்புத்தனமான அன்பை ஏற்றுக்கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி  பரவி வருகிறது.