அஜித் நடித்துள்ள வலிமை (Valimai) திரைப்படத்தை வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கில் சோலோவாக ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்துக்கு போட்டியாக பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள பீம்லா நாயக் (Bheemla Nayak) திரைப்படம் வருகிற பிப்ரவரி 25-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தெலுங்கில் அஜித்தில் வலிமை படத்தின் வசூல் பாதிக்கக்கூடும் சூழல் உருவாகி உள்ளது.

அஜித் நடிப்பில் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் வலிமை (Valimai). இந்தியில் இப்படத்துக்கு போட்டியாக ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியாவாடி படம் ரிலீசாகும் நிலையில், தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாள படத்தின் ரீமேக் தான் பீம்லா நாயக் என்பது குறிப்பிடத்தக்கது.