Powerstar is going to participate in bigboss 2

பிக்பாஸ் 2 இன் முதல் போட்டியாளர் பவர் ஸ்டார்..! வெளிச்சத்திற்கு வரும் மறுமுகம்..!

சூப்பர் ஸ்டார் னா அது ரஜினிகாந்த், பவர்ஸ்டார்னா கோவை சீனிவாசன் தான் என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்

லத்திகா, கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட பல படங்களில்,தன்னுடைய நகைச்சுவை திறமையால் அனைவராலும் அறியபட்டவர். இதற்போது பலபடங்களில் தொடர்ந்து நடித்து வரும் பவர் ஸ்டாரை அடுத்த மாதம் பிக்பாஸ் 2 இல் பார்க்கலாம்.

இதுவரை படத்தில் மட்டுமே காமெடி செய்து வந்த பவர் ஸ்டார், பிக் பாசில் என்னென்ன செய்ய போகிறார்..? உண்மையில் அவர் சினிமாவில் மட்டும் தான் காமெடி செய்வாரா அல்லது நிஜ வாழ்க்கையிலும் காமெடியான நகைச்சுவை மனிதராக இருப்பாரா.? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் உண்மை முகம் என்ன என்பது நிகழ்ச்சியின் முடிவில் மக்களே அறிந்துக்கொள்வார்கள்.

அந்தவகையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்காலம்.

சென்ற ஆண்டு நடைப்பெற்றதை விட இந்த ஆண்டு நடத்தப்படும் பிக்பாஸ் 2 இல் பல சுவாரசியங்கள் காத்திருக்காம்.

அதுமட்டும் இல்லாமல் பவர் ஸ்டார் கலந்துக்கொள்வதால், நிகழ்ச்சியில் என்னென்ன கலாட்டாக்கள் நடக்க போகிறதோ என்ற ஆவல் இப்போதே ஏற்பட்டு உள்ளது.