Asianet News TamilAsianet News Tamil

அடுத்தவன் பணத்தை ஆட்டையை போட்டு படமெடுத்த ஃப்ராடு பவர் ஸ்டார் – அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்

15 years ago the Sanskrit school in Chennai mampalat a small clinic on the street and ran a Power Star Srinivasan
power star-srinivasan-arrested
Author
First Published Mar 7, 2017, 3:46 PM IST


‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படத்தில் ஒன்றும் அறியாத அப்பாவி போல் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசன், பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடித்த ஒன்னாம் நம்பர் ஃப்ராடு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

15 வருடங்களுக்கு முன்பு சென்னை மாம்பலத்தில் உள்ள சமஸ்கிருத பள்ளி தெருவில் ஒரு சிறிய கிளினிக் நடத்தி வந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

ஹோமியோபதியில் காசு கொடுத்து வாங்கிய சான்றிதழை வைத்து கொண்டு டாக்டர் சீனிவாசன் என்ற பெயரில் வைத்தியம் பார்த்தார்.

power star-srinivasan-arrested

அது செல்ப் எடுக்காத நிலையில் மிகப்பெரிய தொழிலதிபர்களை ஏமாற்றும் தந்திர வித்தையை கற்று தேர்ந்தார் சீனிவாசன்.

மாம்பலத்திலிருந்து அண்ணா நகரில் மிகப்பெரிய அலுவலகமும் தொடங்கப்பட்டது.

விலையுயர்ந்த காரில் பவனி வருவது,தனது அல்லைக்கைகளை வைத்துகொண்டு சூரியன் பட கவுண்டமணி போல் கொடுத்த பில்டப்பில் மிக பிரபலமான பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் இவரிடம் ஏமாந்து வெளியே சொல்லாமல் விட்டு விட்டனர்.

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து திருமாவளவனை கவர பேனர்கள் வைத்து அலப்பறை செய்தார் பவர் ஸ்டார்.

power star-srinivasan-arrested

கொஞ்ச நாளிலேயே அவரது சாயம் வெளுத்துப்போக அவரை விரட்டி விட்டார் திருமாவளவன்.

2012ஆம் ஆண்டு பாலசுப்ரமணியம் என்ற தொழிலதிபர் அளித்த புகாரில் கமிஷ்னராக இருந்த ஜே.கே.திரிபாதி அளித்த உத்தரவின் பேரில் பவர் ஸ்டார் பிடித்து ஜெயிலில் போடப்பட்டார்.

அப்போது போலீஸ் தரப்பிலிருந்து ஐபிசி செக்ஷன் 406 (நம்பிக்கை மோசடி) 420 (மோசடி) 506/2 (கிரிமினல் குற்றம்), 27 ஆர்ம்ஸ் ஆக்ட் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டு ஜெயிலில் ரிவிட் எடுக்கப்பட்டார்.

power star-srinivasan-arrested

பின்னர் மீண்டும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு களி தின்றார்.

அந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் 1000 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி Glucose Infrastructure என்ற நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் பத்வானியிடம் 5 கோடி ரூபாய் ஆட்டை போட்டுள்ளார் பவர் ஸ்டார்.

சுமார் 100 கோடி வரை மிக பிரபலமான தொழிலதிபர்களிடம் ஏமாற்றி உள்ளார் இந்த பவர் ஸ்டார்.

இப்படி கடனை உடனை வாங்கி தங்களது தொழிலை விரிவு செய்ய நினைத்த தொழிலதிபர்களின் பணத்தை அபகரித்த சீனிவாசன் லத்திகா என்ற படத்தையும் 2011ஆம் ஆண்டு எடுத்தார் .

power star-srinivasan-arrested

பின்னர் மண்டபம், உனக்காக ஒரு கவிதை, நீதானா அவன், மற்றும் இந்திரசேனா என்னும் அட்டு பிளாப் படங்களை எடுத்தார்.

அரசியலில், சினிமாவிலும் போனி ஆகாத பவர் ஸ்டார் சீனிவாசன் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

power star-srinivasan-arrested

அப்படம் முடியும் தருவாயிலும் ஒரு ஏமாற்று வழக்கு தொடர்பாக சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

கூச்ச நாச்சம் இல்லாமல் அடுத்தவன் பணத்தை அபகரித்து படமும் எடுக்கும் சீனிவாசன் போன்றவர்களுக்கு ரசிகர் மன்றமும் வைத்து கொண்டாடும் கூட்டமும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios