சென்னையில் துவங்கி துபாய் வரை கிளைபரப்பி மோசடி வேலைகளில் ஈடுபட்ட வந்த நடிகர் பவர் ஸ்டார் பண மோசடி செய்வது என்று நண்பர்களிடம் பேசிய ஆடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காமெடி நடிகராக வலம் வரும் பவர் ஸ்டார் சீனிவாசன் துவக்கம் முதலே பல்வேறு பணமோசடிகளில் ஈடுபட்டு சர்வசாதாரணமாக சிறைக்குச் சென்று திரும்பி வரும் வழக்கம் கொண்டவர். ஆலன் என்பவரை 90 லட்சம் ஏமாற்றிய வழக்கில் இவரும் இவரது மனைவியும் ஊட்டிக்குக் கடத்தப்பட்டு கடந்த ஒருவாரமாக பரபரப்பான செய்திகளில் அடிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீட்டிங் செய்வது எப்படி என்று சீனிவாசன் விளக்க, அதை அவரது நண்பர்கள் உற்சாகச் சிரிப்புடன் கேட்கும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் மக்களை ஏமாற்றுவது ரொம்ப ஈஸி , நடிகராக இருப்பதாலேயே 50 சத்விகிதம் நம்பி விடுவார்கள் என்றும் ஃப்ராடு பண்றத்துக்கு நம்ம பெர்ஃபார்மன்ஸ் ரொம்ப முக்கியம் என்றும் ‘போலீஸ்ல சொல்லப்போறேன் என்று யாராவது மிரட்டினால் பூராக் காசையும் போலீஸ்காரங்க கிட்டயே விடப்போறியா?’ என்று மிரட்டினால் நம் வழிக்கு வந்துவிடுவார்கள் என்றும் பல அபூர்வ தகவல்களை உதிர்க்கிறார் பவர் ஸ்டார்.

இதுக்காகவே இந்த ஆளைப் புடிச்சி பழைய உள்ள போடுங்க போலீஸ்கார்.