பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன், கலந்து கொள்ள உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து,  இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

விஜய் டிவி, தொலைக்காட்சியில் விரைவில் ஆரம்பமாக உள்ள, பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்து  அடுக்கடுக்காக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. 

ஏற்கனவே டி.ராஜேந்தர், பிரேம்ஜி, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த தகவலை மறுத்தனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை தொடர்ந்து மூன்று முறை அழைத்ததாகவும் ஒரு சில காரணங்களால் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று நடிகை பூஜா தேவரியா கூட தெரிவித்தார்.

இதே போல்...  கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்து  கொள்வது உறுதி செய்யப்பட்டும், ஒரு சில காரணங்களால் கலந்து கொள்ளாமல் இருந்தவர், பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் விரைவில் ஆரம்பமாக உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து, ஏசியா நெட் செய்தியாளர் அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார். 

மேலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தரப்பில் இருந்து, தனக்கு அழைப்பு விடுத்தது உண்மை தான் என்றும், ஆனால் என் தரப்பில் இருந்து அவர்களுக்கு நான் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார். இதில் இருந்து பவர் ஸ்டார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.