தமிழில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. அடுத்த வாரம் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும். 

பிக்பாஸ் முதல் சீசன் போல், இரண்டாவது சீசன் மிகவும் ஸ்வாரஸ்யமாக இல்லை என்றாலும், சண்டை சச்சரவுக்கு மட்டும் எந்த குறைவு இல்லாமல் செல்கிறது. இந்த நிகழ்ச்சியில் திருப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் மக்கள் மத்தியில் ரிஜெக்ட் செய்யப்படும் ஐஸ்வர்யாவை வெளியேற்றாமல் தக்க வைத்து வருகிறார்கள் பிக்பாஸ் குழுவினர்.

அனைவரும் எதிர்பார்த்தது போல் இந்த வாரம், இரண்டு போட்டியாளர் வெளியேற உள்ளனர். அதில் முதல் கட்டமாக நேற்று நடிகர் பாலாஜி வெளியேறினார். 

இவர் வெளியே வந்ததை அறிந்து நேற்றைய தினம் அவருடைய மனைவி நித்தியா, மற்றும் மகள் போஷிகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாலாஜி எந்த நோக்கத்தில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தாரோ அது ஓரளவிற்கு நிறைவேறி விட்டது என்று தான் கூறவேண்டும். காரணம் பாலாஜியை வேண்டவே வேண்டாம் என ஒதுக்கி வைத்திருந்த நித்தியா மனநிலை தற்போது மாறியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் பாலாஜி நடந்து கொண்ட விதம் இவருடைய மனதை தற்போது மாற்றியுள்ளது.

பாலாஜி வெளியேறும் போது இனி குடிக்க கூடாது என கமல் அட்வைஸ் செய்து நித்தியா பாலாஜிக்கு வாழ்த்து கூறினார். இதற்கு நித்தியா... பாலாஜிக்கு வெளியில் 100 நாள் பிக்பாஸ் போட்டி உள்ளதாகவும் அதில் அவர் வெற்றி பெற்றால் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்வது குறித்து உறுதியாக கூற முடியும் என்பது போல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய பாலாஜி, தற்போது தான் தன்னுடைய மகள் பட்ட கஷ்டங்கள் தனக்கு புரிவதாகவும், போஷிகா பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்த போது தன்னிடம் இரண்டு சத்தியம் வாங்கினார்... ஒன்று "கெட்ட வார்த்தை பேச கூடாது' , மற்றொன்று 'குடிக்க கூடாது' என்பது தான்.

இனி தன்னுடைய மகளுக்காக நான் இப்படி செய்யமாட்டேன், அவருக்கு கொடுத்த சத்தியத்தை உதாசீன படுத்த கூடாது என்பது போல் பேசினார். மேலும் தன்னை போல் யாரும் இருக்காதீர்கள் என கண்ணீர் மல்க அவர் பேசியது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில், இறுதிவரை சென்று ஒரு வாரம் உள்ள நிலையில் பாலாஜி வெளியேற்றப்பட்டாலும். வீட்டின் வெளியே நித்தியாவிற்காக அவர் கெட்ட வார்த்தை பேசாமல் குடிக்காமல் இருக்க வேண்டும் என்கிற டாஸ்கில் பாலாஜி கண்டிப்பாக வெற்றி பெற்று மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வாழ்த்தி வருகிறார்கள்.