ஆபாசபடம் வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட நபரான மியாகலிப்பாவை பின்னுக்குத் தள்ளி அவரது சக நடிகை முதலிடத்தை தட்டி சென்றுள்ளார் .  பிரபல ஆபாச வலைத்தளத்தில் மிகவும் அதிகம் தேடப்பட்டு வந்த நபர் மியாகலிப்பா,  இந்தாண்டு தனது இடத்தை இழந்துள்ளார்.  அதுவும் குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகம் தேடப்பட்ட நடிகையாக இருந்தார் இவர்.  சமீபத்தில் வெளியான ஆபாச வலைதள ஆய்வு அறிக்கையில்  இந்த விவரம் தெரியவந்துள்ளது  அதன்படி 2019 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபர்களுக்கான விருது  லானா ரோட்ஸூக்கு  சென்றுள்ளது .  

இதையடுத்து மியாகலிப்பா மற்றும் ரிலே ரீட்  ஆகியோர் வழக்கமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளனர் .  இந்த முறை ஆண்களால் அல்ல பெண்களால் அதிகம் தேடப்பட்ட நடிகையாக  லானா ரோட்ஸ்  என  வலைதளம் குறிப்பிட்டுள்ளது .  கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது பெண் பார்வையாளர்கள் விகிதம்  2 சதவீத புள்ளிகள் அதிகரித்து  மொத்தம் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது .  ஆபாச திரைப்படங்களின் மூலம் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவராக இருந்த மியாகலிப்பா முன்னால் அட்லட் திரைப்பட  நட்சத்திரம் ஆவார்.   தனது தொழில்முறை வாழ்க்கையில் ஆபாச திரைப்படங்களுக்காக அதிகம் தேடப்பட்ட நடிகையாக வலம் வந்தார் மியா,   குறிப்பாக அவர்  இஜாப் அணிந்து  பாலியல் காட்சிகளில் நடித்தார் என்பதற்காக  அவருக்கு பயங்கரவாத இயக்கங்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனால் சில மாதங்களுக்கு முன்னர் மியாகலிப்பா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஆபாச திரைப்படத் தொழிலை விட்டே ஒதுங்குவதாகவும்,   வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே இத்தொழிலில்  பணியாற்றியதாகவும்,   இத்தொழில் மூலம் தான் சம்பாதித்த பணம் சொற்ப அளவே  என்றும் மனம் திறந்திருந்தார் . கடந்த 2018 ஆம் ஆண்டு ஆபாச இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட  நடிகை என்ற பட்டத்தை பெற்றிருந்தார்  மியா கலிபா என்பது குறிப்பிடத்தக்கது