கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை, எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகிறது. இத்தாலியை அடுத்து, தற்போது அமெரிக்கா பல்வேறு உயிர்களை பலி கொடுத்து வருகிறது. அந்த வகையில், நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் 800 க்கும் மேற்பட்டவர்கள். உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை, எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகிறது. இத்தாலியை அடுத்து, தற்போது அமெரிக்கா பல்வேறு உயிர்களை கொரோனாவிற்கு பலி கொடுத்து வருகிறது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏழை பணக்காரர் என எந்த பேதமும் இன்றி, தாக்கி வரும் கொரோனா வைரஸில் இருந்து சிலர் மீண்டு வந்தாலும், எதிர்பாராமல் பலர் உயிரிழந்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த, பிரபல நடிகர் ஆண்ட்ரூ ஜாக், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

View post on Instagram

லண்டனை சேர்ந்த இவர், ஸ்டார் வார்ஸ் போன்ற பல பிரமாண்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவருடைய இழப்பு மிகுந்த வேதனையை தருவதாக இவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்களின் தங்களுடைய இரங்கல்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.