Asianet News TamilAsianet News Tamil

ஆதித்ய வர்மா... தெலுங்குப் படத்தை அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்திருக்காங்களாம்...

விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் ‘வர்மா’வின் இரண்டாவது வெர்சன் ‘ஆதித்ய வர்மா’வின்  ட்ரெயிலரை வைத்துப் பார்க்கும்போது தெலுங்குப் படத்தை அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்திருப்பதாகவும் துருவும் கூட நடிகர் தேவரகொண்டாவின் நடிப்பை அப்படியே அட்டக்காப்பி அடித்திருப்பதாகவும் விமர்சங்கள் எழுந்துள்ளன.

poor comments about adhitya varma trailor
Author
Chennai, First Published Jun 17, 2019, 2:48 PM IST

விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் ‘வர்மா’வின் இரண்டாவது வெர்சன் ‘ஆதித்ய வர்மா’வின்  ட்ரெயிலரை வைத்துப் பார்க்கும்போது தெலுங்குப் படத்தை அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்திருப்பதாகவும் துருவும் கூட நடிகர் தேவரகொண்டாவின் நடிப்பை அப்படியே அட்டக்காப்பி அடித்திருப்பதாகவும் விமர்சங்கள் எழுந்துள்ளன.poor comments about adhitya varma trailor

ஆதித்ய வர்மாவின் ட்ரெயிலர் ரிலீஸாக இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் அது சுமார் 28 லட்சம் பார்வையாளர்களையே சந்தித்துள்ளது. நடிகர் விக்ரமின் ரசிகர்கள் முழு ஆதரவு கொடுத்திருந்தாலே அது இன்னேரம் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்திருக்கவேண்டும். அது ஒரு பக்கமிருக்க ட்ரெயிலர் குறித்து வந்துள்ள விமர்சனங்கள் படத்தின் வெற்றியப் பெரும் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளன.

முன்னர் டிராப் பண்ணப்பட்ட பாலாவின் ட்ரெயிலரோடு இந்த ட்ரெயிலரை ஒப்பிட்டு வரும் பலரும், பாலாவின் ட்ரெயிலரில் சொந்தக் கற்பனை இருந்தது என்றும் ஆனால் ஆதித்ய வர்மா ட்ரெயிலர் அப்படியே தெலுங்குப் படத்தின் அத்தனை ஷாட்களையும் ஒன்று விடாமல் கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருப்பதாகவும், இசை கூட மாற்றப்படாமல் அப்படியே இருப்பதாகவும் கமெண்ட் அடித்துள்ளனர்.poor comments about adhitya varma trailor

ட்ரெயிலரே இப்படி ஷாட் பை ஷாட் காப்பி அடிக்கப்பட்டிருப்பதால் படத்தையும் அடிப்படை பாதுகாப்பு கருதி அப்படியே எடுத்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஒரு ரீமேக் படத்தை கொஞ்சம் கூட மாற்றி எடுக்காமல் அப்படியே எடுப்பதற்குப் பதில் பேசாமல் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தால் தயாரிப்பாளருக்கு 30 கோடி வரை மிச்சமாகியிருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios