பட வாய்ப்புக்காக குடும்ப குத்துவிளக்காக, தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நெட்டிசன்களை விமர்சிக்க வைத்துள்ளது. 

பட வாய்ப்புக்காக குடும்ப குத்துவிளக்காக, தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நெட்டிசன்களை விமர்சிக்க வைத்துள்ளது.

சமீபகாலமாக, நடிகைகள் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படி கவர்ச்சிப் புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நம்புகின்றனர்.

முதலில் இந்த முறையைக் கையாண்டு வந்த பாலிவுட் நடிகைகளை தொடர்ந்து, தற்போது தமிழ் நடிகைகள் சிலரும் இதனை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் 'சேவல்', 'தெனாவட்டு', ஆகிய படங்களில் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா தற்போது கவர்ச்சி கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ,குப்பத்து ராஜா, ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ள இவர், தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

படவாய்ப்பை பெற, பூனம் பஜ்வா கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இவர் தமிழ் மொழியை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram
View post on Instagram