இன்று வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் பீஸ்ட் படம் பார்க்க நாயகி பூஜா ஹெக்டே திரையரங்குக்கு என்ட்ரி கொடுத்த க்யூட் மூமென்ட் வீடியோ வைரலாகி வருகிறது.
இன்று வெளியாகி நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது பீஸ்ட். ரசிகர்களின் ஏகோபித்த வரவேப்பை பெற்றுள்ள இதன் ட்வீட் ரிவ்யூ வந்த வண்ணம் உள்ளது. தளபதி ரசிகர்கள் பீஸ்ட் மாஸ்டர் பீஸ் என கூறியிருந்தாலும். விஜய் ஹெட்டர்ஸ் வழக்கம் போல படம் மொக்கை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே விமர்சகர்கள் விஜயை காட்டிலும் பூஜா ஹெக்டேவை அதிகமாக பாராட்டி வருகின்றனர். அவரது நடிப்பும் நடனமும் சூப்பர் என புகழ்ந்து தள்ளுகின்றனர். முகமூடிக்கு பிறகு பூஜா ஹெக்டேவின் அடுத்த என்ட்ரி மாஸ் ஹீரோவுடன் அமைந்துள்ளது மிகச்சிறப்பு. முதல் படத்தில் பெரிதும் பேசப்படாத நாயகி பீஸ்ட் மூலம் மிகவும் அறியப்பட்ட ஹீரோயின்ஸ் பட்டியலில் சீட் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் நல்ல கல்லா கட்டி வருகிறது.முதல் நாளிலேயே 40 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பீஸ்டில் டாக்டர் அளவுக்கு கூட காமெடி இடம் பெறவில்லை என்றும். விஜய் டான்ஸ் மாஸ் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தை முதல் ஷோ பார்க்க நேரில் வந்த பூஜா ஹெக்டேவை ரசிகர்கள் செம்ம குஷியில் வரவேற்பு அளித்துள்ளனர். செண்டை மேளத்துடன் தேவதை போல நாயகி வந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
/p>
