Asianet News TamilAsianet News Tamil

தளபதியின் ஆட்டம் போட்ட இப்போதே ரிகர்சல் பார்க்கும் பூஜா ஹெக்டே...! வைரலாகும் புகைப்படம்..!

'பீஸ்ட்' படத்தில் தளபதி விஜய்யுடன் ஆட உள்ள டான்ஸுக்கு ரிகர்சல் செய்யும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை பூஜா வெளியிட அது தளபதி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

pooja hedge dance rehearsals photo goes viral
Author
Chennai, First Published Jun 26, 2021, 7:35 PM IST

'பீஸ்ட்' படத்தில் தளபதி விஜய்யுடன் ஆட உள்ள டான்ஸுக்கு ரிகர்சல் செய்யும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை பூஜா வெளியிட அது தளபதி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்'  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது.

pooja hedge dance rehearsals photo goes viral

கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் முதல் முதலாக விஜய்யை வைத்து 'தளபதி 65 ' ஆவது படத்தை இயக்குகிறார்.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

pooja hedge dance rehearsals photo goes viral

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சுமார் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் படக்குழு சென்னை திரும்பியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் பிரமாண்ட செட் ஒன்றையும் படக்குழுவினர் அமைத்துள்ளனர். இதில் விஜய் பூஜா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் மற்றும், நடன காட்சிகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

pooja hedge dance rehearsals photo goes viral

இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, தற்போது நடிகை பூஜா ஹெட்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'பீஸ்ட்' படத்தின் டான்ஸ் ரிகசலில் ஈடுபட்டுள்ளதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கு என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios