ponradhakrishnan meet vivek

முன்னாள் இந்திய ஜனாதிபதியும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுமான அப்துல் கலாம் அவர்களின் பெயரில் 'பசுமை கலாம்' என்ற திட்டத்தின் மூலம் நடிகர் விவேக் கடந்த சில வருடங்களாக தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். 

ஒருகோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவருடைய இந்த அரிய பணியில் இதுவரை அவர் 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

நடிகர் விவேக்கின் இந்த சேவையை பாராட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவேக்கின் வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். 

மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'முன்னாள் ஜனாதிபதி மேதகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் சிந்தனையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்றி வரும் நடிகர் திரு விவேக் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து விவேக் தனது சமூக வலைத்தளத்தில், 'அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் எளிமையை பார்த்து வியந்ததாக குறிப்பிட்டுள்ளார்'. நடிகர் விவேக்கின் பணி மேலும் தொடர நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.