'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற உள்ள அரண்மனை முதல், அரிஸ்யாசனம் வரை, இந்த படத்திற்கான செட்டுகள் போடப்பட்டது குறித்த வீடியோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

தமிழ் திரையுலகமே வரவேற்க காத்திருக்கும் பிரமாண்ட படைப்பு 'பொன்னியின் செல்வன்'. கல்கியின் வரலாற்று நாவலை படமாக்க பலர், முயற்சித்த நிலையில்... ஒருவழியாக இந்த படத்தை, இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் 'மணிரத்னம்'. இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக இன்னும் 9 நாட்களே மிஞ்சியுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்: முதல் முறையாக குழந்தை வீர் மற்றும் அப்பா ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சௌந்தர்யா நெகிழ்ச்சி!

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட அனைவரும்... பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அதே போல் இந்தியாவின் பிற இடங்களுக்கும் சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று ஹைதராபாத்தில் இந்த படத்தின் புரோமோஷன் பணி நடக்க உள்ளது. மேலும் படக்குழு குறித்த புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து, அவ்வப்போது படக்குழு தரப்பில் இருந்து... வீடியோக்களை வெளியிட்டு புரோமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்:Exclusive: 'வாய்தா' பட நடிகை பவுலின் ஜெசிகா யார்? கடைசி வரை நிறைவேறாத ஆசை! உயிரை பறித்த காதலும் சினிமாவும்..!

அந்த வகையில் இந்த படம் குறித்து, ஜெயராம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் அவர்களுக்குள்ளேயே படம் குறித்து சுவாரஸ்யமாக பேசி கொள்ளும் பேட்டி ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் செட் எப்படி போடப்பட்டது, இதற்காக படக்குழுவினர் மற்றும் கலை இயக்குனரான தோட்ட தரணி ஆகியோர் மேற்கொண்ட சவால்கள் என்னென்ன என்பதை விளக்கும் விதமாக, வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பார்பதற்க்கே மிகவும் பிரமாண்டமாக இருக்கும் அரண்மனை செட்டப்புக்காக இவர்கள் போட்ட உழைப்பு, வசீகரிக்கும் அரியசானத்தை உருவாக்கிய விதம் குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.Behind the sets of PS - 1 ft. Thota Tharrani | Mani Ratnam | Lyca Productions | Madras Talkies