பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் மத்திய பிரதேசத்தில் நடந்து வந்த நிலையில், இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் மத்திய பிரதேசத்தில் நடந்து வந்த நிலையில், இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 'பொன்னின்செல்வன்' படத்தில் விக்ரம், ஜெய்ராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஏ.ஆர். இசைக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கலைக்கு தோட்டாதரணி என ஜாம்பாவன்கள் டீம் களமிறங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும், அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கியுள்ளதால் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்த தகவலும் வெளியானது. அதன்படி பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. மணிரத்னத்தின் ஃபேவரைட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து, ஹைதராபாத், பாண்டிச்சேரி என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில் , தற்போது... இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மத்திய பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர். மிகவும் பழமையான நகரமான ஓர்ச்சா, அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அரண்மனைகளும் கோவில்களுமே நிரம்பியுள்ள இங்குதான், படக்குழு படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு முதல் பாகம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…