தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். 1988 ஆம் ஆண்டு, 'கலியுகம்' என்கிற படத்தில், ஜெயில் கைதியாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த 'மதன காமராஜா', 'வெற்றி விழா' ஆகிய படங்களில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் ரஜினிகாந்துடன் நடித்த 'முத்து', மற்றும் சரத்குமாருடன் நடித்த 'நாட்டாமை' ஆகிய படங்கள் திரையுலகில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். மேலும் 5 திற்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

90 களில் வருடத்திற்கு 8 படங்களுக்கு குறைவில்லாமல் நடித்து வந்த இவருக்கு, கடந்த சில வருடங்களாக, புது நடிகர்களின் வருகையால், பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் இவரை காண்பதே அரிதாகிவிட்டது. 

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது விளையாடியதால் மூலம்,  இவரை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. வில்லன் நடிகராகவே மட்டுமே ரசிகர்களால் அறியப்பட்ட பொன்னம்பலம் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை அவர் நடந்து கொண்ட விதம் எடுத்து காட்டியது. சில சமயங்களில் டபுள் மீனிங் வார்த்தைகள் பயன்படுத்தினார் என்று சில போட்டியாளர்களால் விமர்சிக்கப்பட்டார். 

இந்நிலையில் தற்போது இவர் 'தேவ்' படத்தை தொடர்ந்து இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில்,நடிகர் கார்த்தி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பொன்னம்பலம் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தி ஜோடியாக 'கீதா கோவிந்தம்' நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தின் பூஜை மார்ச் 13 ஆம் தேதி அன்று போடப்பட்டது. இந்த படத்தின் பூஜையில் நடிகர் பொன்னம்பலமும் கலந்து கொண்டு இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். 

விவேக் மெர்வின் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.