சில சமயங்களில் சிலர் இவிங்க உண்மையிலேயே நல்லவிங்களா இல்ல நல்லவனுங்க மாதிரி நடிக்கிறானுகளா என்று குழம்ப வைத்துவிடுகின்றனர். இதோ அஜித்தின் பொங்கல் ரிலீஸ் செண்டிமெண்டுகள்  குறித்து கடந்த இரு தினங்களாய் நடமாடிவரும் ஒரு செய்தியும் மேற்படி வகையறாதான்.

 

96ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘நேசம்’ படத்தில் துவங்கி 2014 பொங்கலுக்கு வெளியான ‘வீரம்’ வரை அஜீத்தின் படங்கள் எப்படியெல்லாம் ஹிட்டடித்தது என்று ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறார்கள்.

அவ்வாறு குறிப்பிடப்பட்ட பொங்கல் ரிலீஸ் படங்களின் பட்டியலில் ’வான்மதி[96] ‘நேசம்’[97], தொடரும்[99], தீனா[2001] ‘ரெட்[2002],’பரமசிவம்[2006], ‘ஆழ்வார்[2007], ‘வீரம்[2014] ஆகிய எட்டுப்படங்கள் இடம்பெற்ரிருக்கின்றன. இதில் ஒரு பொங்கல் படம் கூட தோற்கவில்லை என்றும் அத்தனையும் பிளாக்பஸ்டர் ஹிட் என்றும் அந்தப்பட்டியல் அடித்துக்கூறுகிறது. 

உண்மையில் அந்த எட்டில் ‘தீனா’வும் ‘வீரமும் மட்டுமே ஹிட் அடித்தவை.மற்றவை அனைத்தும் அட்டர்ஃப்ளாப் என்பது ஒருபுறமிருக்க, ஆழ்வார்’’பரமசிவம்’ போன்ற படங்களை தப்பித்தவறி ஞாபகப்படுத்துபவர்களை அஜீத் ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிப்போட்டு மிதிக்கக்கூட செய்வார் என்பது அனுபவித்தவர்களுக்குத் தெரியும். தல’யாரிகளே விஸ்வாஸமா இருக்கவேண்டியதுதான்...ஆனா அது ‘தல’ படம் மாதிரி இல்லாம, கொஞ்சமாவது லாஜிக்கோட இருக்கவேண்டாமா...?