தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பார்த்திபன் கடைசியாக இயக்கி நடித்த திரைப்படம் "ஒத்த செருப்பு சைஸ் 7". ஒரே ஒரு ஆள் மட்டும் நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த படம் பல்வேறு விருதுகளை குவித்த நிலையில், ஆஸ்கர் விருது வரை அதை கொண்டு சேர்க்க முயன்றார். 

 

இதையும் படிங்க: மனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...!

இந்நிலையில், புதுச்சேரி அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சங்கரதாஸ் சுவாமிகள்  பெயரில் வழங்கப்படும் திரைப்பட விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின்  இயக்குனர் வினையராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து புதுச்சேரி அரசின் சார்பாக  விருது அளித்து பாராட்டுவது வழக்கம் . 

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா?... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...!

அதன்படி இந்த ஆண்டு நடைபெறும் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் திரைப்படவிழாவில் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்கிற தமிழ்த் திரைப்படம் சிறந்த தமிழ் படமாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 15ஆம் தேதி அன்று நடைபெறும். புதுச்சேரி அரசின் திரைப்பட விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படும். இவ்விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் விருதுடன் சான்றிதழும் அளிக்கப்படுகிறது . இவ்விருதினை புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து  கலந்துகொண்டு விருது அளித்து சிறப்பிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.