நடிகர் பிரபுதேவா, தேவி படத்தின் ஹிட்டுக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் 'தேவி 2 ' படத்திற்கு பின்  இவரின் கைவசம் அரை டஜன் படங்களுக்கு அதிகமாகவே உள்ளது.

தமிழில் மட்டும், யங் மங் சங், பொன் மாணிக்கவேல், தேள், ஊமை விழிகள்,  உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஏ.சி.முகில் இயக்கத்தில், அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் 'பொன் மாணிக்கவேல்'. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாவது போல், பிரபுதேவாவின் திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில், பிரபுதேவாவிற்கு ஜோடியாக நிவேதே பெத்துராஜ் நடித்துள்ளார். இவர்கள் தவிர சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோரும் நடித்துள்ளனர். 

ஜபாக் படநிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், சிவாநந்தீஸ்வரன்  படத்தொகுப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.