பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்காக தனது முகநூல் பக்கத்தில் பொங்கி எழுந்து சமூகப்போராளி போல் தனக்கு புதிய இமேஜ் ஏர்படுத்திக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி ஒரு பப்ளிசிட்டி பைத்தியம் என்பதை கண்டுபிடித்த போலீஸார் அவரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தினமும் ஏதாவதொரு நாடகம் நடத்தி கவனம் ஈர்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி நேற்று முன் தினம் இரவு, சினிமா பைனான்சியர் சுப்பிரமணியன், இரண்டு அடியாட்களுடன் தனது வீட்டுக்கு வந்து, தன்னை தாக்கியதாக புகார் போலீசில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் . தனது வீட்டில் உள்ள கண்ணாடியை அவர் உடைத்ததாகவும், தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகவும் அதில் அவர் கூறியிருந்தார்.

 இந்த நிலையில், நேற்று காலை அவரை விசாரிக்க காவல்துறையினர் அழைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீரெட்டி மதியம் தாமதமாக வந்ததாக தெரிகிறது.  அப்போது அவரிடம் விசாரித்ததில், தயாரிப்பாளரை தானே வீட்டுக்கு அழைத்து, மது ஊற்றிக் கொடுத்ததாக ஸ்ரீரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தானே கண்ணாடியை உடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதன்பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.