தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வாணிஸ்ரீ. சில கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சிவாஜியுடன் வாணிஸ்ரீ நடித்த வசந்த மாளிகை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றது. பாலாஜி, சி.ஐ.டி. சகுந்தலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் அப்போது வெள்ளிவிழா கொண்டாடியது. கருணாகரன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட வாணி ஸ்ரீக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

இதையும் படிங்க:  செம்ம ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய காமெடி நடிகர் செந்தில்...இளம் பெண்ணுடன் செய்த அசத்தல் டிக்-டாக்...!

வாணி ஸ்ரீ மகன்  அபிநய வெங்கடேஷ் கார்த்திக் பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த மாத இறுதியில் தந்தையுடன் வசித்து வந்த அபிநய வெங்கடேஷ் வீட்டில் தூங்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 36 வயதான அபிநய வெங்கடேஷுக்கு 4 வயதில் மகனும், 8 மாதங்களே ஆன பெண் குழந்தையும் உள்ளனர். மனைவியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். லாக்டவுனால் மனைவி, குழந்தைகளை பிரிந்திருந்ததால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

இதையடுத்து அபிநய வெங்கடேஷ் தந்தை கருணாகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவயதிலேயே தனது மகனுக்கு மாரடைப்பு பிரச்சனை இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார். ஆனால் கருணாகரன் கூறுவது பொய் என்றும், சில வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்த அபிநய வெங்கடேஷ் மதுவுக்கும் அடிமையாக இருந்ததாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் ஆனூர் பங்களாவிற்கு செல்லாமல் இருந்த வாணிஸ்ரீ மகன் இறந்த பிறகு அந்த பங்களாவிற்கு சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

முதற்கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மகன் தற்கொலை குறித்து கேட்கப்பட்டதற்கு விதி முடிந்துவிட்டது, போய்விட்டான் என சாதாரணமாக வாணிஸ்ரீ சொன்ன பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவ உதவி பேராசிரியர் அபிநய வெங்கடேஷ் தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.