Police gun safety for Rajinikanth at Shooting spot
மும்பை டான் நாயகன் படத்தில் 'நாயகன்' திரைக்கு வந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் நாயகன் போல பர்ஃபெக்டாக ஒரு டான் படம் எந்த மொழியிலும் இதுவரை வரவேயில்லை. ஆனால் அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தார்கள்.
இதில் ரஜினியை தவிர மற்றவர்கள் அதல பாதாளத்தில் விழுந்ததே லாபம். காபலியில் இன்டர்நேஷனல் டான் கதையை கையாண்ட ரஞ்சித் இப்போது மீண்டும் மும்பை டான் சப்ஜெக்ட்டையே கையிலெடுக்கிறாராம்.
நாயகன் படத்தில் வந்த அதே தாராவி, கத்தியையும் புத்தியையும் ஒருசேர தீட்டி வாழ்ந்த பிரபல தாதா ''ஹாஜி மஸ்தான்'' கதைதான் விரைவில் ரஞ்சித் இயக்கவிருக்கும் ரஜினி படம்.
இதை கேள்விப்பட்ட ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனுக்கு தெரியவர, " எங்கப்பா ஒரு மகான், எங்கப்பாவை பற்றி தப்பு தப்பா எடுத்தீங்கன்னா சும்மாவிட மாட்டேன்" என்று ரஜினியை மிரட்டி லெட்டரை பறக்கவிட்டார். இதுக்கு பாஜக தமிழிசை பதிலடியை கொடுத்துட்டாங்க... அது இருக்கட்டும்...
படமே ஆரம்பிக்கல. அதுக்குள்ள இப்படியொரு அக்கப்போரா? சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சித் அண்ட் டீம், அதே தாராவியில் எடுக்கவிருந்த காட்சிகளை ரூட் மாற்றிவிடும் எண்ணத்திலிருப்பதாகத் தகவல். ஒரு காட்சிக்காக கூட மும்பை போகப் போவதில்லை என்கிறது படக்குழு.
இதுமட்டுமல்ல... ரஜினிக்கு அதிகம் சிரமம் தராமல் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். EVP ஸ்டூடியோவில் இதற்கென பிரமாண்டமான மும்பை தாராவி செட் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மும்பையிலிருந்து ரஜினிக்குக் கொலை மிரட்டல் வந்ததால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்போகிறார்களாம்.
