நடிகர் விஷ்ணு விஷால், அவர் தங்கியுள்ள அப்பார்ட்மென்டில் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறி, குறியிருப்பு வாசிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான, 'வெண்ணிலா கபடி  குழு' படத்தின் மூலம் தன்னுடைய, திரையுலக பயணத்தை துவங்கியவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த படத்தை தொடர்ந்து, கதைகளை மிகவும் தேர்வு செய்து நடிக்க துவங்கிய விஷ்ணு விஷால், முண்டாசு பட்டி, ராட்சசன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்தார். நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் திரையுலகில் தடம் பதித்தார்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். 
இந்த தம்பதிகளுக்கு ஆரியன் என்கிற மகனும்  உள்ளார். மேலும் தற்போது விஷ்ணு விஷால் பிரபல பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலை கட்டாவுடன் காதலில் உள்ளார். அவ்வப்போது இருவரும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், கோட்டூர் புரத்தில் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த அப்பார்ட்மென்டில் வசித்து வரும் அக்கம் பக்கத்தினர் கொடுத்துள்ள புகாரில், விஷ்ணு விஷால் வீட்டில் இரவு நேரத்தில்  அதிகப்படியான இசை சத்தம் வந்ததாகவும். நேரம் செல்ல செல்ல சத்தம் அதிகரித்து கொண்டே சென்றதால் இதுகுறித்து கேட்க அவரது வீட்டின் கதவை தட்டிய போது அவரது வீட்டு கதவுகள் திறக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

பின்னர் எண் 100 - க்கு புகார் கொடுக்கப்பட்டு போலீசார் வந்தபின்னரும், தரைகுறைவான வார்த்தைகளால் விஷ்ணு விஷால் பேசியதாகவும். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து இதுபோன்ற ரகளைகள் செய்வதால், வயதானோர், மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அடிக்கடி பார்ட்டி, மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்வதாகவும் தங்களுடைய புகாரில் தெரிவித்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர்கள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் விரைந்து இந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.