இயக்குனர் அட்லி இயக்கத்தில், உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு தற்போது வட சென்னையை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டு நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையிலேயே படப்பிடிப்பு நடப்பதால்... தளபதி, விஜய்யை காண்பதற்காக ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் குவிந்து வருகின்றனர்.

ரசிகர்களின் கூட்டத்தை படக்குழுவின் செக்யூரிட்டி பிரிவால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓரிரு தினத்திற்கு முன் ரசிகர்கள் கூட்டத்தை கட்டு படுத்த முடியாமல், போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய கேள்விப்பட்ட விஜய், படப்பிடிப்பு இடத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்து படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.