Asianet News TamilAsianet News Tamil

என் உண்மையை யாரும் உரசிப்பார்க்க தேவையில்லை... திட்டவட்டமாக போட்டுடைத்த வைரமுத்து... வீடியோ...!

கேரளாவின் என்.வி. விருதை திரும்ப அளிப்பதாகவும், விருதுப்பணம் 3 லட்சத்துடன் 2 லட்சம் சேர்த்து ரூ.5 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிப்பேரரசு வைரமுத்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

Poet vairamuthu explain why return ONV award video
Author
Chennai, First Published May 29, 2021, 2:54 PM IST

கவிஞர் வைரமுத்துவிற்கு கேளராவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும்,  ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு இந்த விருது கொடுக்கப்படுவதாக, கேரள நடிகை பார்வதி, மற்றும் பாடகி ஆகியோர் விமர்சிக்க சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தனர். இதை தொடர்ந்து அந்த அமைப்பு வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்குவது குறித்து பரீலிக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Poet vairamuthu explain why return ONV award video

இந்நிலையில் கேரளாவின் என்.வி. விருதை திரும்ப அளிப்பதாகவும், விருதுப்பணம் 3 லட்சத்துடன் 2 லட்சம் சேர்த்து ரூ.5 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிப்பேரரசு வைரமுத்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:  அனைவரையும் வணங்குகிறேன். கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.  ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன்.  

Poet vairamuthu explain why return ONV award video

இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன். 

Poet vairamuthu explain why return ONV award video


ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios