கடந்த சீசன்களில் எல்லாம் பார்க்காத பல சம்பவங்களும் இந்த சீசனில் அரங்கேறியது. அதாவது கன்டென்ட்டுக்காக காதலிப்பது, காதலிப்பது போல் நடிப்பது, நான்கு பேரை காதலித்தால் பிரச்சனை வராது என கவின் தனது வாயலேயே ஒப்புக்கொண்டார். 

இந்நிலையில் பிக்பாஸ் சீசனில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களை முன்னாள் போட்டியாளர் கட்டிப்புடி வைத்தியர் என பிரபலமடைந்த சினேகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொற்றில்;  தப்பு பண்ண அந்த இரண்டு பேரையும் அப்போதே வெளியே அனுப்பியிருந்தால் மற்றவர்களுக்கு பயம் வந்திருக்கும். இதனை மன்னிக்க மனமிருந்த பிக்பாஸ்க்கு சரவணனை மன்னிக்க ஏன் மனமில்லை, மதுமிதா விஷயத்தை காட்ட ஏன் துணிவில்லை? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த சீசனில் முதல் கெட்டப்பெயரை வாங்கிக் கொடுத்தவர் கவின் தான். நான்கு பெண்களை காதலிப்பது போல நடித்தால் ட்ரென்ட்டாகும் ஜாலியாக இருக்கும் என்று கவின் சொன்னபோதே, கவினை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே துரத்தியிருக்க வேண்டாமா? 

ஏற்கனவே பிக்பாஸ் தான் கவினை உள்ளே அனுப்பியிருக்கிறார் என குற்றச்சாட்டு உள்ளது. இப்போ, பிக்பாஸ்க்கு முதல் முறையாக ஒரு குற்றச்சாட்டையும் கெட்டப்பெயரையும் வாங்கித்தந்த கவினை, அவர் பேட்டரியை கழட்டிய பிறகும் பிக்பாஸ் வெளியே அனுப்பாதது சந்தேகமா இருக்கு, ஒருவேளை பிக்பாஸ் தான் அவரை உள்ளே அனுப்பினாரோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கிறது என்று கவிஞர் சினேகன் கூறினார்.