புஷ்பா பட வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் டிரெண்டிங் ஆன நடிகர் அல்லு அர்ஜூனிடம், முன்னனி புகையிலை நிறுவனம் தங்களது விளம்பர படத்தில் நடிக்க அழைத்துள்ளனர். மேலும் அதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் புகையிலை விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜூன் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் இதுக்குறித்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்,” புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது.புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது.

நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன். புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…