வீரர்களுக்கு டிரிங்ஸ் கொடுத்த பிரதமர்... ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்...

கிரிக்கெட் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர்  ஸ்காட் மாரிசன் கூல்ரிங்ஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லைக்குகளை அள்ளி வருகிறது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர் அந்நாட்டின் பிரதமர் லெவன் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி,  9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.

இந்த விளையாட்டு போட்டியின் இடையே நடைபெற்ற சம்பவம் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது ஆஸ்திரேலிய மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை அணியுடன் ஆஸ்திரேலிய அணி விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கையில் கூல்ரிங்ஸ் உடன் மைதானத்திற்குள் நுழைந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், வீரர்களுக்கு டிரிங்ஸ் கொடுக்க ஆரம்பித்தார். 

கிரிக்கெட் பிரேக்கின் போது, வாட்டர் பாய் என்று அழைக்கப்படுபவர்கள் வீரர்களுக்கு கூல்டிரிங்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் கிரிக்கெட் போட்டியைக் காண வந்த ஆஸ்திரேலியே பிரதமரே இந்த அதிரடி செயலில் இறங்கியது கிரிக்கெட் ரசிகர்களை வெகு வாக கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் கூல்டிரிங்க்ஸை கையில் எடுத்துக் கொண்டு கிரவுண்டிற்குள் ஓடுவது முதல் வீரர்களுக்கு ஹைபை கொடுத்துவிட்டு திரும்புவது வரையிலான அனைத்து புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, லைக்குகளை அள்ளி வருகிறது.