பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
PM Modi Birthday Wishes to Prabhas : இந்திய சினிமாவின் முன்னணி பான்-இந்தியா நட்சத்திரமான பிரபாஸுக்கு இன்று பிறந்தநாள். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் நாடு முழுவதும் ரசிகர்களைப் பெற்ற இவருக்கு, திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை முதல் ஆளாக பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
பிரபாஸை வாழ்த்திய மோடி
அந்த பதிவில், ரெபெல் ஸ்டார் பிரபாஸுக்கு 45வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளில் ஒருவரான அவர், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் மகிழ்வித்து வருகிறார். . அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 23-ந் தேதி பிரபாஸின் பிறந்தநாளை ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, அவரது பழைய ஹிட் படங்களான 'ஈஸ்வர்', 'பௌர்ணமி', 'பாகுபலி' போன்றவை மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. சினிமா வாழ்க்கையைத் தாண்டி, பொதுவெளியில் தெரியாமல் செய்யும் உதவிகளாலும் பிரபாஸ் கவனம் ஈர்க்கிறார்.
இதனிடையே, இந்திய சினிமா இதுவரை கண்டிராத மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வருகின்றன. 'தி ராஜா சாப்', 'சலார்: பார்ட் 2 - செளரியாங்க பர்வம்', 'ஸ்பிரிட்', 'கல்கி 2898 AD: பார்ட் 2' போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
வேகமாக படங்களை முடிப்பதிலும் பிரபாஸ் முன்னணியில் இருக்கிறார். 'கல்கி', 'சலார்' போன்ற பிரம்மாண்ட படங்களை ஒரு வருடத்திற்குள் முடித்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார். 'பாகுபலி', 'கல்கி' போன்ற படங்கள் மூலம் 1000 கோடி கிளப்பில் தொடர்ந்து இடம்பிடிக்கும் பிரபாஸ், பிரம்மாண்ட படங்களை உருவாக்கும் இயக்குநர்களின் முதல் தேர்வாகவும் இருக்கிறார்.
