ஏப்ரல் மாதம் தேர்தல் வருவதையொட்டி தேர்தல் தற்போதே தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், சின்னங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியை சேர்த்தவர்கள் குறிப்பிட்ட பணத்திற்கு மேல் எடுத்து செல்ல கூடாது. பரிசு பொருட்கள் போன்றவை எடுத்து செல்ல கூடாது என கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படமான பி எம் நரேந்திரமோடி திரைப்படம், ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமங் குமாா் இயக்கத்தில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாராளுமன்ற தேர்தல் தொடங்கும் நிலையில் இப்படம் வெளியிடுவதற்கு எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.