The Kashmir Files : சர்ச்சைக்குரிய கதையை நேர்த்தியாக படமாக்கி உள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

காஷ்மீர் ஃபைல்ஸ்

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி நடிப்பில் கடந்த மார்ச் 11-ந் தேதி வெளியான திரைப்படம் காஷ்மீர் ஃபைல்ஸ். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காஷ்மீரில் கடந்த 1990களில் பயங்கரவாத அமைப்புகள் தலைதூக்கியதை அடுத்து, அங்குள்ள இந்துக்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அமோக வரவேற்பு

அப்போது அங்கு கொடூர வன்முறை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அதனை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ள படம் தான் காஷ்மீர் ஃபைல்ஸ். விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் 4.25 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியது.

பிரதமர் மோடி பாராட்டு

சர்ச்சைக்குரிய கதையை நேர்த்தியாக படமாக்கி உள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, மெர்சலாகிப் போனாராம். மேலும் இயக்குனர் விவேக், தயாரிப்பாளர் அபிஷேக் மற்றும் நடிகை பல்லவி ஜோஷ் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார் மோடி.

அக்‌ஷய் குமார் வாழ்த்து

மோடியின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதுதவிர ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் இப்படத்தை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அக்‌ஷய் குமார், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்க மக்கள் அதிகளவில் திரையரங்குகள் பக்கம் வருவதை பார்க்கும் போது அருமையாக இருக்கிறது. விரைவில் படத்தை பார்க்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... The Legend Movie : லெஜண்ட் சரவணன் படத்தில் ஐட்டம் சாங்! குத்தாட்டம் போட அஜித் பட நடிகையை களமிறக்கிய அண்ணாச்சி