பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி டுவிட் செய்துள்ள இரங்கல் பதிவில், கே. விஸ்வநாத் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் ஒரு படைப்பாற்றல் மற்றும் பன்முக இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டு, சினிமா உலகின் தலைசிறந்தவராக விளங்கினார். அவரது படங்கள் பல தசாப்தங்களாக பார்வையாளர்களை கவர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மம்முட்டி

விஸ்வநாத்தின் மறைவுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், விஸ்வநாத்தின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் இயக்கத்தில் சுவாதிகிரணம் படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... சிப்பிக்குள் முத்தாக கண்டெடுக்கப்பட்டு சலங்கை ஒலியாக ஒலித்த மாபெரும் கலைஞன்... யார் இந்த கே.விஸ்வநாத்?

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்டிஆர் டுவிட்டர் வாயிலாக கே விஸ்வநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “தெலுங்கு சினிமாவின் புகழை பரப்பியவர்களில் விஸ்வநாத்துக்கு முக்கிய இடம் உண்டு. சங்கரா பரணம், சாகர சங்கமம் போன்ற பல நம்பமுடியாத படங்களை கொடுத்தவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்று டுவிட் செய்துள்ளார்.

Scroll to load tweet…

சிரஞ்சீவி

விஸ்வநாத்தின் மறைவுக்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கே.விஸ்வநாத்தின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரைப் போன்ற ஒரு இயக்குனரின் மறைவு எனக்கு மட்டுமல்ல இந்திய திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. காலத்தால் அழியாத எண்ணற்ற படங்களை கொடுத்திருக்கிறார். அவரது புகழ் வாழும். ஓம் சாந்தி," என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... தீவிர ரசிகனாக... மாஸ்டருக்கு சல்யூட் - இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு கமல் எழுதிய இரங்கல் கடிதம்