please watch indians agriculture rj balaji talk

ஆர்.ஜே.பாலாஜி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர். அதே போல இவருடைய காமெடி வசனங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சமீபகாலமாக இவர் அதிக சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டு வருகிறார். 

இந்நிலையில் தமிழகத்தை சார்ந்த விவசாயிகள் டெல்லியில் 29 நாட்களாக பல்வேறு போராட்டம் நடத்தி தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுக்குறித்து சமீபத்தில் ஒரு கலந்தாய்வு ஆங்கில தொலைக்காட்சி நடத்தியது, இந்த நிகழ்ச்சில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கலந்துக்கொண்டார்.

இதில் இவரிடம் தமிழக விவசாயிகள் என தொகுப்பாளர் கூற ‘சார் மன்னிக்கவும், அவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் தான்.

ஆனால்,தமிழகத்தை சேர்ந்த அஷ்வின் கிரிக்கெட்டில் சாதனை படைக்கும் போது மட்டும் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் என்று சொல்கிறீர்கள்.

அப்போது அவர் தமிழனாக தெரியவில்லை, அதே போல இவர்களை இந்திய விவசாயிகளாக பாருங்கள், அவர்கள் சொல்வதை கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்கள்’ என உணர்ச்சிவசமாக கூறியுள்ளார்.

இவர் பேச்சுக்கு தற்போது இணையதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.