நடிகை வரலட்சுமிக்கு கொஞ்சம் டைம் சிறப்பாக இருக்கிறதுபோல. படம் படுத்துக்கொண்டாலும்  இவர் பாஸ் மார்க் வாங்குவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே பாலாவின் அட்டர்ஃப்ளாப் படமான ‘தாரை தப்பட்டை’யிலும் நடிப்பில் செமயாக ஸ்கோர் பண்ணியிருந்த வரலட்சுமிக்கு லிங்குவின் ‘சண்டக்கோழி 2’விலும் நல்ல பெயர். 

‘பேச்சி பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது’ என்று அவர் காட்டும் அடாவடியில் ஒரு ஏழெட்டு ‘தூள்’ சொர்ணாக்காக்கள் ஒருசேர தெரிகிறார்கள்.  இனி கதாநாயகி ரோல்களில் வந்து சோதிப்பதை விட வரலட்சுமி வில்லியாக நடித்தால் தமிழ்சினிமா விமோஷனம் பெறும் என்கிறார்கள் அவரை வீரலட்சுமியாக ரசித்தவர்கள். 

’சண்டக்கோழி2’ படப்பிடிப்பின்போதே  யூனிட் ஆட்கள் கதாநாயகி கீர்த்தி சுரேஷிடம் ‘உங்கள விட வில்லியா நடிக்கிற வரலட்சுமிக்குத்தான் பெரிய பேரு கிடைக்கப்போகுது’ என்று ஓட்டிக்கொண்டே இருந்தார்களாம். தியேட்டரில் வரலட்சுமிக்கு கிடைக்கிற வரவேற்பைப் பார்க்கும்போது அது பலித்துவிட்டது என்பது தெரிகிறது. இன்னொரு பக்கம் விஷால்-கீர்த்தியின் காதல் காட்சிகள் படு சொதப்பலாக இருந்ததும் வரலட்சுமிக்கு பாசிடிவாக அமைந்துவிட்டது.