மூத்த பின்னணி பாடகியான வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். 

பிறப்பிலேயே இவர் ஒரு இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வேலூரில் பிறந்த இவரது பெற்றோர் துரைசாமி ஐயங்கார்–பத்மாவதி ஆவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி என்று பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். இவர், ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறார். மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற தமிழ் பாடலை பாடி தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி நாட்டுப்புற பாடல்கள், பாப், கஜல், பஜனை பாடல்களையும் பாடியுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, குஜராத் மாநில விருதுகளை பெற்றிருக்கிறார். 

கடந்த 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்த கலைவாணியின் இசைப் பயணம் குட்டி என்ற ஹிந்தி படத்தின் மூலமாக ஆரம்பமாகியுள்ளது. அதன் பிறகு கிட்டத்தட்ட 4 தலைமுறைகளாக பாடல்கள் பாடியுள்ளார். சினிமாவைத் தவிர கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான பக்தி பாடல்களை பாடியிருக்கிறார் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

BREAKING: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானர்; மறைந்தது கானக் குயில்!!

Malligai En Mannan | மல்லிகை என் மன்னன் | Vani Jairam, K.R.Vijaya Hit Song HD

கணவரை இழந்த பின்னர் வாழ தெம்பு இல்லை என்று கூறியவர் வாணி ஜெயராம்!

தேசிய விருதுகள்:

1975 – தேசிய விருது – அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சில பாடல்கள்
1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சங்கராபரணம் படத்தில் சில பாடல்கள்
1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" - சுவாதி கிரணம்
2023 - பத்ம பூசண் விருது, இந்திய அரசு

மாநில அரசு விருது:

1972 - சிறந்த பாடகிக்கான குஜராத் மாநில திரைப்பட விருது
1979 - சிறந்த பாடகிக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
1979 - சிறந்த பாடகிக்கான நந்தி விருது
1982 - சிறந்த பாடகிக்கான ஒடிசா மாநில திரைப்பட விருது

இவை தவிர பிற விருதுகள் வாங்கியுள்ளார். 

வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்:

  1. போலே ரே பபிஹரா - குட்டி (ஹிந்தி)
  2. நித்தம் நித்தம் நெல்லு சோறு - முள்ளும் மலரும்
  3. பாரதி கண்ணம்மா - நினைத்தாலே இனிக்கும்
  4. மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி
  5. அன்பு மேகமே - எங்கம்மா சபதம்
  6. பொங்கும் கடலோசை - மீனவ நண்பன்
  7. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிச் சென்றது - நெஞ்சமெல்லாம் நீயே
  8. வேறு இடம் தேடிப் போவோளா - சில நேரங்களில் சில மனிதர்கள்
  9. என் உள்ளம் அழகான - சினிமா பைத்தியம்
  10. எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது - அவன்தான் மனிதன்
  11. மல்லிகை முல்லை பூப்பந்தல் - அன்பே ஆருயிரே
  12. மேகமே மேகமே - பாலைவனச் சோலை
  13. நானா பாடுவது நானா - நூல்வேலி
  14. நாதமெனும் கோயிலிலே - மன்மத லீலை
  15. நீ கேட்டால் நான் மாட்டேன் என்று - இளமை ஊஞ்சலாடுகிறது
  16. ஆலமரத்துக் கிளி - பாலாபிஷேகம்
  17. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்
  18. ஏ பி சி நீ வாசி - ஒரு கைதியின் டைரி
  19. அழகிய விழிகளில் - டார்லிங் டார்லிங் டார்லிங்
  20. இரவும் பகலும் - பில்லா 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். இது தவிர, பஜனை, நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான பக்தி பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Top 10 Bhakthi Tamil Padalgal | Sung By Vani Jairam | Tamil Devotional Songs | Tamil Bhakti Padalgal