இயக்குநர் பாலாவுக்கு இருந்த பலமான பிம்பத்தை வர்மா படம் வாட்டி வதைத்து வருகிறது. வர்மா படத்தை மற்றொரு இயக்குநரை வைத்து இயக்கி வருகிறார்கள். சினிமா வரலாற்றில் ஒரு படத்தை எடுத்து முடித்த இயக்குநரை மாற்றி விட்டு அதே படத்தை மற்றொரு இயக்குநரை வைத்து புதிதாக இயக்கச் சொன்னது இது தான் முதல்முறையாக இருக்கும்.

 

அதன் பிறகு தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குநராக கொண்டாடப்பட்ட பாலாவுக்கு அதன் பிறகு எத்தனை எத்தனையோ சோதனை? மீண்டும் தன்னை சிறந்த இயக்குனராக நிரூபிக்கப்படாத படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். வர்மா திரைப்படத்தை வம்படியாக பறித்து குப்பைக்கு அனுப்பிய விக்ரம் தரப்பு மீது கோபத்தில் இருக்கும் பாலா, அடுத்த படத்தை ஆரம்பிக்க எடுத்த முயற்சிகள் அத்தனைக்கும் இழுபறியே முடிவு. 

அதர்வா- ஆர்யா இணைந்து நடிக்கும் ஒரு படத்தை திட்டமிட்ட பாலா, அதர்வாவை புக் செய்து விட்டு ஆர்யாவையும் அழைத்து இருக்கிறார். அதற்கு ஆர்யா “நான் ஏகப்பட்ட கடனில் இருக்கேன். உங்ககிட்ட வந்து வருஷக்கணக்குல சீரழிய முடியாது. வருஷத்துக்கு நாலு படமாவது நடிச்சாதான் வண்டி ஓடும்” என்று கூறிவிட்டாராம். இதனால், கடும் அப்செட்டுக்கு ஆளாகி இருக்கிறார் பாலா.