Pisasu 2 Official Teaser : ரத்தம் தெறிக்கும் மிரட்டல் காட்சிகளுடன் பிசாசு 2 டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிசாசு 2' படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இதில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார். இவர்களுடன் இதை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஹாரர் படமான இதற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக இந்த படத்தின் முதல் சிங்கிள் "உறவின் பாட்டு" காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 2 அன்று வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இப்படத்தின் டீசர் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.

வித்யாசமான கதைக்களத்தை கொடுத்து வரும் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த படத்தை பாலா தயாரித்திருந்தார். நாகா, ராஜ்குமார் பிச்சுமணி, அஷ்வத் ஆகியோருடன் ராதாரவி , கல்யாணி நடராஜன், பிரயாகா மார்ட்டின் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

'பிசாச்சி' என்னும் பெயரில் 2015 ஆண்டு வெளியான தெலுங்கு படத்தின் ரீமேக். இந்த படம் கன்னடத்தில் 'ராக்ஷசி' என்றும் இந்தியில் 'நானு கி ஜானு' என்றும் ரீமேக் செய்யப்பட்டது.. நாயகனால் உயிரிழக்கும் நாயகி தன்னை கொலை செய்தது தெரியாமல் இருக்கும் நாயகனை காப்பாற்றுவதற்காக பிசாசாக சுற்றிவரும் கதையை மையமாகக் கொண்டது. இதில் ராதாரவி இறந்த பெண்ணின் தந்தையாக நடித்திருப்பார். அதோடு பிணத்தை தனது ஐஸ்கட்டி செய்யும் தொழிற்சாலையில் மறைத்து வைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
